பகுத்தறிவோடு செயல்பட்டு தீயணைக்கும் பறவையின் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.
ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ஒரு வீட்டின்முன் குவிந்துகிடக்கும் சருகுகளிலிருந்து புகை வருகிறது. அதனைக்கண்ட பறவை ஒன்று சமயோசிதமாக செயல்படத் தொடங்குகிறது.
தீப்பற்றி எரியத் தொடங்கினால் தனக்கு ஆபத்து இல்லையென்றபோதிலும், தீயை அணைக்கும்போது தனக்கு ஆபத்து நேரலாம் என்றபோதிலும் அவற்றைப் பற்றியெல்லாம் கவலைகொள்ளாமல் நெருப்பை அணைப்பதிலேயே அந்தப் பறவை கவனமாக உள்ளது.
குவிந்துகிடக்கும் சருகுகளை ஒவ்வொன்றாகத் தன் அலகால் இழுத்து அகற்றுகிறது. அனைத்து சருகுகளையும் வெளியே இழுத்து தீயை முற்றிலுமாக அணைத்துவிடுகிறது. அந்தப் பறவையின் செயல் மனதை வருடுகிறது.
மனிதர்களை மிஞ்சிவிட்டது அந்தப் பறவை…..தீயணைப்புத் துறைக்கே வழிகாட்டும்போல இந்தப் பறவை…