Wednesday, December 24, 2025

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூமில் தீ விபத்து…28 ஸ்கூட்டர்கள் எரிந்து சேதம்

விருதுநகர் என்ஜிஓ காலனி பகுதியில் ஹீரோ எலக்ட்ரிக் என்ற மின்சார பைக் ஷோரூமும் இயங்கி வருகிறது. இந்த ஷோரூமில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் 19 புதிய வாகனங்களும் சர்வீஸ்க்கு வந்த 9 வாகனங்களும் தீயில் எரிந்து சேதமானது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

Latest News