திருப்பூர் அருகே பெயிண்ட் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் என்பவர் காமநாயக்கன்பாளையத்தில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகின்றார். நேற்று வழக்கம்போல வியாபாரம் முடிந்த நிலையில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை கடையில் இருந்து கரும்புகை தீ பற்றி எரிந்துள்ளது.
இதனை பார்த்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் தீயை அனைப்பதற்குள் கடை முழுவதும் தீ பரவியது.
இதனை அடுத்து சூலூர் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு நிலைய வீரர்களும் சேர்ந்து 4 மணி நேரமாக போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.