Saturday, May 10, 2025

தையலுக்கு பதிலாக ஃபெவிகுயிக் : செவிலியர் பணியிட மாற்றம்

கர்நாடகா மாநிலத்தில் கன்னத்தில் காயமடைந்த 7 வயது சிறுவனுக்கு தையலுக்கு பதிலாக ஃபெவிகுயிக் தடவி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த செவிலியர் ஜோதி “தையல் போட்டால் தழும்பு ஏற்படும் என்பதால் ஃபெவிகுயிக் பயன்படுத்தினேன். பல ஆண்டுகளாக இப்படி செய்கிறேன்” என பேசியுள்ளார்.

ஆரம்ப சுகாதார மைய சுகாதார பாதுகாப்பு குழுவிடம் பெற்றோர் புகாரளித்திருந்த நிலையில் செவிலியர் ஜோதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Latest news