ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உட்பட 46 வேட்பாளர்கள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 5ம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளராக உள்ளவர்கள், மாநிலத்தின் வேறு பகுதியில் பணி புரிந்தாலும் அவர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.