மகள் புகுந்தவீடு செய்வதை கண்டு கண்ணீர் விட்டு அழும் தந்தை

352
Advertisement

அப்பாக்களின் உலகம் என்றால் அது பெண் குழந்தைகள் தான்.ஒரு சிறு துன்பம் கூட தன் மகளை நெருங்கிவிடக்கூடாது என ஒரு பாதுகாவலனாக,ஒரு நண்பனாக, நிஜ சூப்பர் ஹீரோவாக இருப்பார்கள் அப்பாக்கள்.

பெண் குழந்தைகளும், தாயைவிட அப்பாவிடம் தான் அதிக பாசத்தை வெளிப்படுத்துவார்கள்.இவ்வுலகை அறிமுகம் செய்த தன் தந்தையை பிரியும் ஒவ்வொரு நொடியும் பெண் பிள்ளைகளுக்கு வாழ்வில் வேதையான நேரம் என உணரச்செய்யும்.

இந்த இரு இதயமும் உடையும் ஒரு தருணம் தான்  திருமணம்.ஆம்… தன் மகளை மற்றொரு வீட்டிற்கு அனுப்பிவைக்கும் பொது,பெற்றோர்களின் மனநிலையோ “எனக்கு இது போதும்”என்பது போல மகிழ்ச்சியை பிரிவின் இறுகிய நெஞ்சோடு 100 ஆண்டும் வாழவேண்டும் என வாழ்த்துவார்கள்.

இணையத்தில் உலாவரும் வீடியோ ஒன்று ,மகளை பிரியும் தந்தையின் உணர்வை உணரச்செய்துள்ளது.பகிரப்பட்ட வீடியோவில்,பெண் ஒருவருக்கு சிறப்பாக திருமணம் முடிந்த நிலையில், மணப்பெண் புகுந்தவீட்டிற்கு புறப்படும் நேரம் வந்தது.

பிறந்ததிலிருந்து பிரியாத தாய் மற்றும் தந்தை உடன் நின்றுகொண்டு இருக்கிறார் அந்த பெண்.தந்தையோ தன் குழந்தையின் பிரிவை தாங்காமல் மணமக்களை வாழ்த்திய ஒரு நொடியில் கண்கள் குளமாகின.

மகள் செல்வதை பார்க்கமுடியாமல், திரும்பிய படி அங்கிருந்து நகர்ந்து செல்கிறார்  அந்த தந்தை.இவ்வுலகில் ஒவ்வொரு தந்தையையும் மற்றும் மகளையும் இணைக்கும் இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.