மக்களின் கண்களுக்கு தென்பட்ட மர்மமான தங்க பாம்பு ! சுவாரசிய சம்பவம்..

347
Advertisement

உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் தங்கக் கவசவாலன்‘  இதை ஆங்கிலத்தில்golden shield tail என்று கூறுகிறார்கள் ,இந்த பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர்.

ஏனெனில், இந்த வகை பாம்பு 142 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போதுதான் மனிதர்களின் கண்ணில் சிக்கியுள்ளது. இந்த பாம்பை பிடித்து தற்போது ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.மற்ற பாம்புகளை போல இல்லாமல் பார்ப்பதற்கே மிகவும் அழகாக தங்கத்தை போல ஜொலிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்மமான பாம்பு வகையில் ஒன்றுதான் தங்கக் கவசவாலன்‘. மழைக்காடுகளில் மட்டுமே இந்த வகை பாம்புகள் இந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே இருக்கின்றன. இந்த பாம்பை பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. ஏனெனில், மண்ணுக்குள் பல அடி ஆழத்தில்தான் இந்த பாம்பு வசிக்கும். இரவு நேரங்களில் மட்டுமே இரை தேட இவை வெளியே வரும்.

1880-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக கேரளா இருந்த போது, வயநாடு பகுதியில் உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் என்பவர் இந்த தங்கக் கவசவாலன் பாம்பை முதன்முதலில் பார்த்தார். இந்நிலையில் , கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வயநாட்டில் உல்ள செம்பரா மலைப்பகுதியில் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்ணில் இந்த பாம்பு தென்பட்டது.

சூரிய வெளிச்சத்தில் பார்த்த்தால் தங்கத்தை போல இந்த பாம்பு தகதகவென ஜொலிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த பாம்பின் வால்பகுதியானது தங்கத்தை உருக்கி வைத்தது போல காணப்படும். அதனால்தான் இந்த பாம்புக்கு தங்கக் கவசவாலன் எனப் பெயர் வந்துள்ளது. சுமார் 142 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வகை பாம்பு மனிதர்களின் கண்ணில் சிக்கியதோடு மட்டுமல்லாமல் பிடிபட்டும் இருக்கிறது. இது பாம்பு ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என உயிரியல் ஆய்வாளர்கள்தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.