வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகள்

168
Advertisement

வயல்களிலிருந்து வெட்டுக்கிளிகளை விரட்ட மைக்கைப் பயன்படுத்திய விவசாயிகளின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெட்டுக்கிளி படையெடுத்து வந்து விளைநிலங்களை ஆக்கிரமித்துள்ளன. இதனால் பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ள வெட்டுக்கிளிகளை அகற்ற வழிதெரியாமல் தவித்த விவசாயிகள் தற்போது ஒலிபெருக்கிகளைக் கையில் எடுத்துள்ளனர்.

வீடியோவில் காணும் பண்ணையின் நடுவே உள்ள அந்த ஒலிபெருக்கியில் பலத்த இசை வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அங்குள்ள வெட்டுக்கிளிகள் அங்கிருந்து வெளியேறத் தொடங்குகின்றன.

Advertisement

விவசாயிகளின் இந்தப் புதுமையான முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. தட்டுகளைக்கொண்டு சத்தம் எழுப்புவது, உரத்த இசையை ஒலிப்பது என்று தங்களின் பயிர்களைக் காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்துவந்த விவசாயிகள் தற்போது ஒலிபெருக்கியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

விவசாயிகளின் முயற்சிக்குத் தக்க பலன் கிடைத்துள்ளது. விவசாயிகளின் ஆர்வத்தையும் அக்கறையையும் விவசாயிகள் மட்டுமன்றி, பொதுமக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர்.