https://www.instagram.com/tv/CJ8JxrTFJmr/?utm_source=ig_web_copy_link
பாலிவுட், கோலிவுட் என்று இந்தியத் திரையுலகில் கொடிகட்டிப்
பறந்தவர் நம்ம ஊர் மயிலு நடிகை ஸ்ரீதேவி. இவரின் மகளான
ஜான்வி கபூரும் இளம்வயதிலேயே கலைச் சேவை செய்ய வந்துவிட்டார்.
24 வயதேயான ஜான்வி கபூர் சில வருடங்களுக்குமுன் தனது பாய்
பிரண்டுடன் கடற்கரையில் உச்சக்கட்டக் கவர்ச்சியில் ஆட்டம்போட்டுக்
கலக்கியிருந்தார். ரசிகர்களின் தாகத்தைத் தீர்த்து வைத்த அவரது
சேவை தற்போதும் தொடர்கிறது.
இடுப்பை மட்டும் வளைத்து வளைத்து ஆடும் பெல்லி டான்ஸ் ஆடி
இந்தியாவுக்கு மிக முக்கியத் தேவையான கலைச் சேவையை வழங்கிப்
பெருங்குறையைப் போக்கியுள்ளார் ஜான்வி கபூர். இந்தப் பெல்லி டான்ஸைப்
பார்த்து அவரது ரசிகக் கண்மணிகள் ஏக்கப் பெருமூச்சும் நிம்மதிப்
பெருமூச்சும் விட்டுள்ளனர்.
தொடரட்டும் ஜான்வி கபூரின் கலைச் சேவை. போகட்டும் ரசிகக்
கண்மணிகளின் கவலைகளும் ஏக்கங்களும்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜான்வி கபூர் வெளியிட்டுள்ள
அவரது பெல்லி டான்ஸைப் பார்த்துக் கிரங்கிப் போயுள்ளனர் அவரின்
ரசிகர்கள். நீங்கள் அந்தப் பெல்லி நடனத்தைப் பார்த்து பரவசம்
அடையுங்கள் ரசிக சிகாமணிகளே….