மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது உறவினர்களின் காதணி விழாவிற்கு சென்று வீடு திரும்பிய போது, அனைத்து பொருட்களும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது குடும்பத்தகராறு காரணமாக, கார்த்திக்கின் உறவினர்களே வீட்டை சேதப்படுத்தியது, தெரியவந்தது. ஏற்கனவே உறவினர்களுக்கும், கார்த்திக்கும் இடையே நிலத்தகராறு உள்ளதாகவும், அது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து வாடிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.