பொய்யான நரக வாழ்க்கை : விஷ்ணுகாந்த் வெளியிட்ட அறிக்கை.

240
Advertisement

நடிகர் விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விஷ்ணுகாந்த்-சம்யுக்தா ஜோடி திருமணமான இரண்டே மாதங்களில் பிரிந்துள்ளனர்.

தங்களின் பிரிவிற்கு இருவரும் மாறி மாறி குற்றம் சுமத்தி வருவது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.விஷ்ணுகாந்த் முதலில் தங்களின் பிரிவு குறித்து விளக்கமளித்து பேட்டி ஒன்று கொடுத்தார். உடனே சம்யுக்தா இன்ஸ்டாகிராம் லைவில் தோன்றி விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான புகார்களை சுமத்தினார்.

இந்நிலையில் விஷ்ணுகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஒருவரை நம்பி என் திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான, நரக வாழ்க்கையில் இருந்து என்னை காப்பாற்றிய இறைவனுக்கும் இயற்கைக்கும் நன்றி.