Friday, December 5, 2025

தலையில் இடியை இறக்கும் போலி பற்பசைகள்! எப்படி கண்டுபிடிப்பது? என்னவெல்லாம் பாதிப்பு?

சமீபகாலமாக சந்தைகளில் தரமற்ற மற்றும் போலி Toothpaste-கள் அதிக அளவில் விற்பனையாகி வருவது நுகர்வோரின் ஆரோக்கியத்துக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. பிரபலமான நிறுவனங்களின் பெயரில் தயாரிக்கப்படும் இந்த போலி பற்பசைகள், சரியான தரச் சான்றிதழ்கள் இல்லாமல், குறைந்த தரமான வேதிப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.

போலி Toothpaste களில் பயன்படுத்தப்படும் கலவைகளில் டிரைக்ளோசான், ஃபார்மால்டிஹைடு, அதிக அளவு ஃபுளோரைடு, மற்றும் பிளீச்சிங் ஏஜென்ட் போன்ற ஆபத்தான ரசாயனங்கள் அடங்கியிருக்கக்கூடும். இவை வாயின் உள் திசுக்களை பாதித்து வாய் புண்கள், ஈறு வீக்கம், பல் உறுதியிழப்பு, மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன. சில நேரங்களில், நீண்டநாளாக இவ்வகை பற்பசைகளை பயன்படுத்துவதால் கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற உடல் உறுப்புகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.

மேலும், போலி Toothpaste களில் சரியான அளவில் கேல்சியம் மற்றும் பிளூரைடு இல்லாததால், பற்கள் பலவீனமடையும். சிறுவர்களின் பல் ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. சிறார்களுக்கு நச்சு தன்மை கொண்ட பற்பசைகள் தவறுதலாக விழுங்கப்பட்டால் வாந்தி, வயிற்றுவலி மற்றும் தலைசுற்றல் போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

நிபுணர்கள் எச்சரிக்கையில் கூறுவது என்னவென்றால், பற்பசை வாங்கும் போது ISI அல்லது FSSAI சான்றிதழ் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். விலை குறைவாக இருப்பதால் தரத்தை புறக்கணிப்பது ஆபத்தானது. எனவே, நம்பகமான நிறுவனங்களின் Toothpaste களையே பயன்படுத்துவது மட்டுமே வாய்ச் சுகாதாரத்தையும் உடல்நலத்தையும் பாதுகாக்கும் முக்கிய வழி என கூறுகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News