தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காலை 8.30 மணிக்கு அது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது.
இதன் காரணமாக வட மாவட்டங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
