சென்னை பூந்தமல்லி அருகே, காலாவதியான ஐஸ் கிரீம்கள் டன் கணக்கில் கொட்டப்படுவதாகவும், அவைகள் காலாவதி ஆனது என்பதை அறியாமல் மக்கள் எடுத்து செல்வதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பூந்தமல்லி அடுத்த வீரராகவபுரம் ஏரியில், காலாவதியான ஐஸ்கிரீம் மற்றும் பால் பாக்கெட்டுகள் டன் கணக்கில் கொட்டப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்பட்டுள்ள ஐஸ்க்ரீம்களையும், பால் பாக்கெட்டுகளையும், அவை காலாவதி ஆனது என்பதை அறியாமல் மக்கள் எடுத்து செல்வதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சுற்றுவட்டார மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீரராகவபுரம் ஏரியில், தொழிற்சாலை கழிவுகளும், மருத்துவக் கழிவுகளும் கொட்டப்படுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக கூறும் மக்கள், நீர்வளத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
