சட்டமன்ற எதிர்க்கட்சி துண தலைவர் ஆர் .பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் வேண்டுகோள்.
முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் இன்றைய தினம் வெளியிட்டுள்ள வீடியோவில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழக அம்மா பேரவையின் சார்பில் ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை தோறும் திண்ணை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து நாளை 11 வாரதிண்ணை பிரச்சாரம் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், கழக அம்மா பேரவை செயளாலர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ளதாவது;
காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதி தாக்குதலில், அப்பாவி மக்கள் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார்கள் இந்த சம்பவத்திற்கு முதன்முதலாக கடும் கண்டனத்தை தெரிவித்தவித்தவர் எடப்பாடியார்.
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையவும் ,வீரவணக்கத்தையும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைத்தார், அதிமுகவின் குரலாக எடப்பாடியார் சட்டமன்றத்தில் பேசியதை மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும்.
வானம், ஸ்பேஸ் என்று தமிழகம் அறியாத சொல் இன்றைக்கு தமிழக மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஏன் உலகம் முழுவதும் அதிகம் பேசப்படும் சொல்லாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அதற்கு காரணம் திமுக அரசு திடீரென்று சமீபத்தில் புதிதாக அறிவித்த விண்வெளி கொள்கை தான்.
அது என்னவென்று பார்த்தால், ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தில் இந்த துறை தப்பவில்லை என்பது தான் அதில் உள்ள விவகாரம். பூனைக்குட்டி அவசரமாக,அவசரமாக, வெளியே வந்தது போல இந்த நான்காண்டுகளில் இல்லாத வகையில் திடீரென்று சிந்தித்து இப்போது புதிய விண்வெளி கொள்கையில் புதிய அவதாரத்தை எடுத்து இருப்பதை பார்க்கிறபோது, ஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தில் இருந்து தமிழகத்தை நாம் மீட்டெடுத்து உண்மையை தோலுரித்துக் காட்ட தார்மீக பொறுப்பும், கடமையும் அதிமுக தொண்டர்களுக்கு உள்ளது .
வானம், ஸ்பேஸ் என்ற சொல் இனி தமிழகத்தில் உச்சரிக்கும் போவதை எச்சரிக்கையாக நாம் சொல்ல வேண்டும், ஸ்டாலின் குடும்ப வாரிசாக இருந்த சபரீசன் இனி அமெரிக்காவில் உள்ள எலான் மாஸ்க் வாரிசாக இனி உலகம் பார்க்கப்படுவது என தமிழக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
ஆகவே தமிழக மக்களை சிந்தித்துப் பாருங்கஸ்டாலின் குடும்ப ஆதிக்கத்தில் விண்வெளி கூட விலக்கு இல்லை ஆகவே கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழக ரீதியில் 82 மாவட்டங்களில் கழகஹஅம்மா பேரவை சார்பில் நடைபெறும் திண்ணை பிரச்சாரங்களில் மக்களிடத்தில் நாம் சொல்ல வேண்டியது பொறுப்பும் கடமை நம்மிடம் உள்ளது என கூறினார்.