ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு பிப்ரவரி 5ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சி மட்டுமே களத்தில் உள்ளன. அ.தி.மு.க., தே.மு.தி.க, மற்றும் த.வெ.க., உள்ளிட்ட கட்சி தேர்தலை புறக்கணித்துள்ளன.
இந்நிலையில், வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுப்பதிவு செய்ய இயலாத, 85 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு இன்று தொடங்கியது. வயதானவர்கள் 209 பேரும் , மாற்றுத்திறனாளிகள் பேரும் என மொத்தம் 256 பேர் தபால் ஓட்டுப்போட தகுதி பெற்றுள்ளனர்.
தகுதியானோர் வீடுகளுக்கு ஓட்டுச்சாவடி அலுவலர்கள் இன்று முதல் ஜனவரி 27ம் தேதி வரை ஓட்டுப்பதிவு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர்.