Sunday, December 22, 2024

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு…தேர்தல் எப்போது?

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான ஈவேரா திருமகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து மீண்டும் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த சனிக்கிழமை காலமானார்.

இந்நிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவித்து தேர்தல் ஆணையத்துக்கு சட்டசபை செயலகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜனவரி அல்லது பிப்ரவரியில் டெல்லிக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலோடு ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Latest news