Thursday, February 19, 2026

“ஆங்கிலம் அவமானம்” அமித்ஷாவின் பேச்சுக்கு இ.பி.எஸ் கொடுத்த ரியாக்ஷன்

டெல்லியில் நடைபெற்ற புத்தக திருவிழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் ”ஆங்கிலம் பேசுவதற்கு வெட்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆங்கிலம் பேசுபவர்கள் வெட்கப்படும் ஒரு சமூகம் விரைவில் உருவாகும்.” என பேசினார்.

அமித்ஷாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவரிடம் அமித்ஷா பேசியது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் “அமித்ஷா அவருடைய கருத்தை சொல்லி உள்ளார். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு, தாய்மொழி என்பது முக்கியம். அனைவருக்கும் தாய்மொழி என்பது மிக முக்கியம். தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தி தான் இதனை சொல்லி உள்ளார்.” என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related News

Latest News