Monday, September 1, 2025

இனி ஒரு மாதம் பணிபுரிந்தாலும் ஓய்வூதியம் கிடைக்கும் : EPFO ல் அதிரடி மாற்றம்

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) ஓர் முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டமான EPS (Employees’ Pension Scheme) தொடர்பாக, இப்போது ஒருமாதம் மட்டுமே பணிபுரிந்த ஊழியருக்கும் ஓய்வூதியம் பெறும் உரிமை வழங்கப்படுகிறது.

பழைய விதிமுறை என்ன?

முந்தைய நடைமுறையின்படி, ஒரு ஊழியர் 6 மாதங்களுக்குக் குறைவாக பணியாற்றி விட்டுவிட்டால், அவரது EPS பங்களிப்பு கணக்கில் சேர்க்கப்படாமல் “Zero Complete Year” எனக் கருதப்பட்டது. இதனால், அவரது ஓய்வூதிய உரிமை நீக்கப்பட்டு, பிஎஃப் தொகை மட்டும் திருப்பித் தரப்பட்டது. EPS பங்களிப்பு ஒரு வகையில் வீணாகிவிடும் நிலை ஏற்பட்டது.

புதிய விதிமுறை

தற்போது EPFO வெளியிட்ட சுற்றறிக்கையில், ஒரே மாதம் EPS-க்கு பங்களித்த ஊழியரும் ஓய்வூதியம் பெறத் தகுதியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் செய்ய வேண்டியவை

உங்கள் PF பாஸ்புக்கில் EPS பங்களிப்பு சேர்க்கப்பட்டுள்ளதா என சரிபாரிக்க வேண்டும். EPS பங்களிப்பு பதிவாகவில்லை என்றால், EPFO-வில் புகார் அளிக்கலாம். புகார் அளிக்கும் போது, பாஸ்புக்கின் ஸ்கிரீன்ஷாட் அல்லது PDF கோப்புகள் தேவைப்படும்.

யாருக்கெல்லாம் இது பயனளிக்கும்?

BPO மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பணிபுரிபவர்கள், டெலிவரி ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், தற்காலிக பணியாளர்கள், அடிக்கடி வேலை மாறும் இளம் தொழிலாளர்கள். இவர்கள் EPS பங்களிப்பை இழக்காமல், ஓய்வூதிய உரிமையை பாதுகாக்க முடியும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News