Thursday, August 28, 2025
HTML tutorial

சூப்பரான வசதிகளுடன் புதிதாக வரும் EPFO 3.0 திட்டம்

மத்திய அரசு புது EPFO 3.0 திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் பிஎஃப் பணத்தை யூனிபைடு பாக்கிங் இன்டர்ஃபெஸ் (UPI) வசதியால் எளிதில் பெற முடியும். இதனால் பிஎஃப் உறுப்பினர்களுக்கு மிக பெரிய பலனாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

EPFO 3.0 தளம் பிஎஃப் சேவைகளை வேகமாகவும் எளிதாகவும் நலமுடன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிர்வகிப்பதில் Infosys, Wipro, TCS போன்ற பெரிய நிறுவனம் பங்கு கொண்டுள்ளன.

ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் வசதி

பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் UAN எண்ணை செயல்படுத்தி, ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைத்தால், அவசர தேவையில் ஏடிஎம் மூலம் பணம் எடுத்துக்கொள்ள முடியும்.

யூபிஐ மூலம் பணம் பெறும் வசதி

டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப, யூபிஐ செயலியின் மூலம் உடனடியாக பிஎஃப் பணத்தை எடுக்கக்கூடியது உள்ளடக்கப்பட்டுள்ளது. புதிய தளம் ஊழியர்களுக்கு எளிமையான, வேகமான மற்றும் வசதியான டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும்.

ஆன்லைனில் திருத்தங்கள் செய்யும் வசதி

பிஎஃப் கணக்கில் எந்தவொரு தகவல் மாற்றமும் அல்லது கணக்கு நிலையை தெரிந்து கொள்ளும் பணியும் EPFO அலுவலகம் செல்லாமல், OTP மூலம் ஆன்லைனில் செய்யலாம். இது நேரத்தை மிச்சப்படுத்துகிறது.

கிளைம் செடில்மென்ட்

பிஎஃப் உறுப்பினர் இறப்பின் போது கிளைம் செடில்மென்ட் எளிதாக்கம் இறந்த உறுப்பினரின் குடும்பத்தினருக்கு கிளைம்களை எளிதாக பெற உதவும் வசதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News