அமைச்சர் ஐ.பெரியசாமி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் துப்பாக்கி ஏந்திய CRPF வீரர்களின் பாதுகாப்புடன் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தில் துரைராஜ் நகரில் உள்ள வீட்டிலும், திண்டுக்கல் மாவட்டம் சிலப்பாடியில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும் அவரது மகனுமான ஜ.பி. செந்தில்குமார் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.