அமைச்சர் ஐ.பெரியசாமியின் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள ஐ.பெரியசாமியின் வீடு, சென்னை சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விடுதியிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையை சோதனை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே ஐ.பெரியசாமியின் தலைமைச்செயலக அலுவலகத்திற்கு செல்லும் நுழைவாயில் பூட்டு போட்டு அடைக்கப்பட்டுள்ளது.