Friday, April 18, 2025

சர்ச்சைகளுக்கு நடுவே கோடிக்கணக்கில் வசூலை குவித்த எம்புரான்

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘லூசிஃபர்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி வெளியானது.

இப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டது. சர்ச்சைகளுக்கு நடுவே இப்படம் கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளது.

இப்படம் ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படம் முன்பதிவில் மட்டுமே ரூ. 70 கோடிக்கும் மேல் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Latest news