Thursday, December 4, 2025

திருப்பூர் : காலி மது பாட்டில்களை கழுத்தில் மாலையாக போட்டுகொண்டு ஊழியர்கள் போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 227 டாஸ்மார்க் மதுபான கடைகள் உள்ளது இந்த கடைகளில் காலி பாட்டிலை திரும்ப பெற்று 10 ரூபாய் பெரும் திட்டம் கடந்த நவம்பர் 27 முதல் திருப்பூரில் அமலுக்கு வந்தது.

இந்த திட்டம் அமலானது முதலே பார் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள், திருப்பூர், அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மார்க் கிடங்கு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காலி பாட்டிலை திரும்ப பெரும் திட்டத்தால் மது பிரியர்கள் வீசி செல்லும் எச்சில் பாட்டல்களை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாவதாகவும், காலி பாட்டிலை திரும்பப் பெறும்பொழுது போதிய சுகாதாரம் இன்றி பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் கூறுகின்றனர். மேலும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுகாதாரக் கேடு மற்றும் நோய் பரவும் நிலை ஏற்படுவதாகவும் கூறுகின்றனர்.

எனவே காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை ரத்து செய்ய கோரி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் 700க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு டாஸ்மாக் கிடங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News