Sunday, December 14, 2025

புகார் அளித்த நபரை மிரட்டிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரது வீட்டிற்கு ராஜா மற்றும் முருகன் ஆகிய 2 மின்வாரிய பணியாளர்கள் சென்று, மது போதையில் வந்து மிரட்டி விட்டுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் புகார் அளித்த நபரை மிரட்டிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Related News

Latest News