சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ராணி. இவரது வீட்டிற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சராசரியாக 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை இதுவரை மின்கட்டணம் வருவது வழக்கம்.
இந்த மாத கணக்கீட்டின்படி 73024 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக 8 லட்சத்து 38 ஆயிரத்து 747 ரூபாய் மின் கட்டணம் என தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ராணியின் மகள் மணிமேகலை என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார்.
இது தொடர்பாக திருமங்கலத்தில் உள்ள மின் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் இனிவரும் நாட்களில் மின் கணக்கீடு தொடர்பான எந்த புகாரும் வராமல் நடவணிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.