எடோ கோபி…

215
Advertisement

பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ படம் ஞாபகத்துக்கு வருதா…

இப்ப குளிக்கறதப் பத்திதான் பேசப்போறோம்.

பலபேர் காக்கா குளியல்தான் குளிக்கிறாங்க…
பக்கெட்ல உள்ள தண்ணிய எடுத்து நேரா தலையில
ஊத்துறாங்க… ஆனா… இப்படிச் செய்யக்கூடாதாம்….

எப்படிக் குளிக்கணும்..சித்தர்கள் சொன்ன குளியல்
முறைய பார்ப்போமா…

உடலும் மனமும் ஆரோக்யமா இருக்கறவங்க தினமும்
காலையில குளிக்கணுமாம். அதுவும் பச்சத் தண்ணியில
அதாவது, குளிர்ந்த நீராலதான் குளிக்கணுமாம். வெந்நீர்லயோ
வெந்நீர் கலந்த நீர்லயோ குளிக்கக்கூடாதாம்.

குறிப்பா, ஷவர்ல குளிக்கக் கூடாதாம். அப்படிக் குளிச்சா
உடல் வெப்பம் அதிகரிச்சு ஜலதோஷம் பிடிக்குமாம்…

முதல்ல கால்ல இருந்துதான் ஆரம்பிக்கணுமாம்… அதாவது,
இடது கால் அடிப்பகுதியிலருந்து தண்ணிய ஊத்திக்கிட்டே
இடுப்பு வரைக்கும் வரணுமாம்.

அப்புறம் இதேமாதிரி வலது கால்ல அடிப்பகுதியில இருந்து
இடுப்புவரைக்கும் தண்ணிய ஊத்தணுமாம்….

அதுக்கப்புறம்… இடுப்புக்குமேல ஊத்த ஆரம்பிச்சு
தோள்பட்டை வரைக்கும் தண்ணி ஊத்தணும்… இடது
தோள்வரைக்கும் முதல்ல… வலது தோள்வரைக்கும்
அப்புறமா….

கடைசியாதான் தலையில தண்ணி ஊத்தணுமாம்…
அப்பதான் ஜலதோஷம் பிடிக்காதாம்…

அதுமட்டுமல்ல, அதிகப்படியான உடல்வெப்பமும் குறையுமாம்.
கண் எரிச்சலும் நீங்குமாம். உடலும்சுறுசுறுப்பா இயங்குமாம்…

குளிச்சு முடிச்ச உடனே தலைய துவட்ட ஆரம்பிச்சிருவோம்…
இதுவும் சரியான முறையில்லங்கறாங்க சித்தர்கள்.

மொதல்ல, முதுகுப் பகுதிய மென்மையான பருத்துத்
துணியாலான டவல் கொண்டுதான் துடைக்கணுமாம்…
ரெண்டாவதா…முகத்த துடைக்கணுமாம்… பலபேர்
முகத்தையும் தலையையும்தான் துவட்டுறாங்களாம்.
இது சரியான முறையில்லியாம்….

முதுகு, முகம், உடம்பு எல்லாப் பகுதியையும்
துடைச்ச பிறகுதான் தலைய துவட்டணுமாம்….
இந்த முறையில குளிச்சு துடைச்சா உடலும் மனசும்
ப்ரெஷ்ஷா இருக்குமாம்…

இப்ப வெயில் காலம்ங்கறதால பலபேர் அடிக்கடி
குளிப்பீங்க இல்லியா…

நிம்மதியா தூங்கணும்… உடல் ஆரோக்யமா இருக்கணும்…
சளிப் பிடிக்காம இருக்கணும்….இப்படியெல்லாம் ஆசைப்படுற
நாம அதுக்கேத்த மாதிரி முறையான குளியல மேற்கொள்வோமே…..