கோவை மாவட்டம் அன்னூரில் அத்திகடவு – அவிநாசி திட்ட குழுவின் சார்பில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி இந்த விழாவை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு வடிவம் எடப்பாடி பழனிசாமி என பேசியுள்ளார். மேலும், ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் கொண்டுவர அயராது உழைப்பவர் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின் அதிமுகவை மீட்டெடுத்து இயக்கத்தை காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. இறையருள் பெற்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி என பேசியுள்ளார்.