Sunday, December 7, 2025

உலகை அதிரவிட்ட வைத்த எட் கெய்ன்! யார் இந்த சைக்கோ கொலையாளி? கேட்போரை நடுங்கவிடும் சம்பவம்!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தை சேர்ந்த எட் கெய்ன் (Ed Gein) என்பவர் 20-ம் நூற்றாண்டில் உலகையே பயமுறுத்திய சைக்கோ கொலையாளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1906-ல் பிறந்த இவர், சிறுவயதில் கடுமையான தாயின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார். தாயின் மரணத்துக்குப் பிறகு, அவர் மனநிலை பாதிக்கப்பட்டு, பல்வேறு கொடூரச் செயல்களில் ஈடுபட்டார்.

1957-ம் ஆண்டில், எட் கெய்னின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில், மனித உடல் உறுப்புகள் கொண்டு செய்யப்பட்ட முகமூடிகள், நாற்காலிகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பயங்கரமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர் கல்லறைகளைத் தோண்டி, சடலங்களை எடுத்து வந்து அவற்றை பயன்படுத்தியதும், சிலரை கடத்தி கொன்றதுமாக விசாரணையில் தெரியவந்தது.

அவரது செயல்கள் காரணமாக, எட் கெய்ன் “பிளெயின்ஃபீல்டு கசாப்” என அழைக்கப்பட்டார். 1957-ல் அவர் கைது செய்யப்பட்டு, மனநல சிகிச்சைக்காக சிறப்பு மருத்துவமனையில் அடைக்கப்பட்டார். 1984-ஆம் ஆண்டு அவர் அங்கு மரணமடைந்தார்.

எட் கெய்னின் கொடூரக் குற்றங்கள் ஹாலிவுட் திரைப்படங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. “Psycho”, “த டெக்ஸ்ஸாஸ் செயின்சா மசக்கர்”, “The Silence of the Lambs” போன்ற பிரபலமான படங்களுக்கான பாத்திரங்கள், அவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்டவையே.

சாதாரணமாகத் தோன்றும் ஒருவர், தனது மனநோயால் எவ்வாறு உலகையே உலுக்கும் குற்றவாளியாக மாறுகிறார் என்பதற்கு எட் கெய்ன் ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படுகிறார். நிபுணர்கள், மனநலம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் போது, அவரின் பெயர் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News