முயல்களுக்கும் பெண்ணுக்கும் சாப்பிடும் போட்டி

439
Advertisement

முயல்களுக்கும் பெண்ணுக்கும் நடந்த சாப்பிடும் போட்டி வலைத்தளவாசிகளைக் கவர்ந்து வருகிறது.

திருவிழாக் காலங்களிலோ, பொழுதுபோக்குக் காலங்களிலோ விநோதமானப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்த விழாவை களைகட்டச்செய்யவும், பொதுமக்களை மகிழ்விக்கவும் இப்படிப் புதுமையான போட்டிகளை விழா ஏற்பாட்டாளர்கள் நடத்துவது உலகெங்கிலும் உள்ள வழக்கம்தான்.

அந்த வகையில் தற்போது வந்துள்ளது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உணவுண்ணும் போட்டி.

சில மாதங்களுக்குமுன் நாயுடன் சிறுவன் ஒருவன் போட்டிபோட்டு நூடுல்ஸ் சாப்பிடும் போட்டியில் கலந்துகொண்டான். இறுதியில் செல்லப்பிராணியே வெற்றிபெற்றது. தற்போது நடந்துள்ளது வேறு ரகம்.

அண்மையில் கலிபோர்னியாவில் இரண்டு பெரிய முயல்களுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே சாலட் உண்ணும் போட்டி நடந்தது. போட்டிக்கு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. 10 நிமிடங்களில் அதிக அளவு சாலட்டை தின்று முடிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.

இந்தப் போட்டியில் சமூக ஊடகத்தால் பிரபலமான ரெய்னா ஹுவாங் என்னும் பெண் கலந்துகொண்டார். சாலட் தின்பதில் சளைக்காதவரான இந்தப் பெண், இரண்டு பெரிய முயல்களுடன் போட்டியிட்டார்.

அவர் 10 நிமிடங்களில் ஒன்றரை கிலோ எடையுள்ள சாலட்டை தின்று முடித்தார். அதேசமயம், போட்டியாளரான இரண்டுமுயல்களும் சாலட்டை முகர்ந்து பார்த்துவிட்டு சாப்பிடாமல் இருந்துவிட்டன. அதனால், ரெய்னா ஹுவாய் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

இந்தப் போட்டியின்மூலம் சாலட் முயலின் உணவு அல்ல என்பதைப் போட்டியாளர்கள் தெரிந்துகொண்டனர்.

புதுசு புதுசா சிந்திக்கிறாய்ங்க….தினுசு தினுசா போட்டி நடத்துறாய்ங்க…