தாறுமாறாக மாற போகும் பூமி!

392
Advertisement

எதிர்காலத்தில் அனைத்துக்கண்டங்களும் ஒன்றிணைந்தால் என்னவாகும்  என்பது குறித்தும் 250 மில்லியன் வருடங்களுக்கு பிறகு பூமி எப்படி இருக்கும் போன்ற ஆய்வு முடிவுகள் அனைவரையும்  பிரமிக்க வைத்துள்ளது.பிளெமிஷ் மொழியை சேர்ந்த வரைபடக் கலைஞர் ஜெராடஸ் மெர்கேட்டர் (Gerardus Mercator) ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் மிக முக்கியமான வரைபடம் ஒன்றை உருவாக்கினார். அவர் வரைந்த அந்த வரைபடத்தில் ஆஸ்திரேலியா விடுபட்டும், அமரிக்கா தோராயமாகவும் வரையப்பட்டிருந்தது , அந்த வரைபடம் அவ்வளவு துல்லியமாகவும் இல்லை.

இந்நிலையில் வரைபடத்தில் உள்ள தவறுகளை திருத்தி கண்டங்களின் அமைவிடத்தை சரியாக காட்டும் துல்லியமான வரைபடத்தை வரைபட கலைஞர்கள் வரைந்தனர்.

அவர் வரைந்த அந்த வரைப்படத்தில் ஏழு கண்டங்களும் நிலையானதாக உள்ளதுபோல வரைந்துள்ளார் நடந்த ஆண்டு அவருக்கு தெரியாது இந்த கண்டங்கள் நிலையானதாக இருக்காது என்று ஏனெனில் அவர் 400 ஆண்டுகளுக்கு முந்தய காலத்தில் வாழ்ந்தவர்.

ஒரு காலத்தில் இந்த ஏழு கண்டங்களும் ஒன்றாகக் கூடியிருந்தன என்று சொல்லப்படுகிறது , ஒன்றிணைத்துள்ள கண்டங்கள் பாஞ்சியா என்ற சூப்பர் கண்டமாக அறியப்பட்டது.அதற்கு முன்பாக மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய பன்னோடியா, ரோடினியா, கொலம்பியா, கெனார்லாந்து மற்றும் ஊர் ஆகிய சூப்பர் கண்டங்கள் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.சூப்பர் கண்டங்கள் சிதறி, சுழற்சி அடைப்படையில் ஒன்று கூடுவதாக சொல்லப்படுகிறது,நாம் அனைவரும் இப்போது அந்த சுழற்சியின் பாதியில் இருக்கிறோமாம் , நாம் அறிந்த நிலப்பரப்புகள் எவ்வாறு மாற்றியமைக்கப்படும்பூமி எதிர்காலத்தில் என்ன வகையான சூப்பர் கண்டமாக  இருக்கக்கூடும்? போன்ற கேள்விகள் அனைவரிடையேயும் எழுந்துள்ளது , நமக்கு முன்பு நான்கு உதாரணங்கள் உள்ளன. அவற்றின்படி பார்த்தால் பூமியில் வசிக்கும் ஜீவராசிகள் ஒருநாள் மிகவும் வித்தியாசமான வேற்றுக்கிரகத்தில் வசிக்கக்கூடும் ஆராய்ச்சியாளர்களால் கருத்துதெரிவிக்கப்படுகிறது.