இயர்ஃபோன்கள் மற்றும் ஹெட்ஃபோன்களை அதிக நேரம் பயன்படுத்தினால், காது கேளாமை ஏற்படும் என மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இயர்ஃபோன் மற்றும் ஹெட்ஃபோன்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால், காதுகள் கேட்கும் திறனை நிரந்தரமாக இழக்கும் என்றும் எச்சரித்துள்ளார். சிலருக்கு காதில் ஏதோ ஒலி கேட்பது போன்ற சத்தம் ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.
நீங்கள் ஹெட்ஃபோன்களை அதிகமாகப் பயன்படுத்தினால் உங்கள் கேட்கும் திறனை அழிப்பது மட்டுமல்லாமல், தலைவலி, தலைச்சுற்றல் மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்னையை தவிர்க்க, ஒரு நாளைக்கு 2 மணி நேரத்திற்கு மட்டுமே இயர்ஃபோன் மற்றும் ஹெட்ஃபோன்கள் பயன்படுத்த வேண்டும். ஒலி அளவு 50 டெசிபல்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் நீண்ட நேரம் ஹெட்ஃபோன்களுடன் வேலை செய்ய விரும்பினால், ஒவ்வொரு 30-40 நிமிடங்களுக்கும் ஒரு இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் காதுகளைப் பாதுகாக்க இயர்போன்களுக்குப் பதிலாக ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துங்கள்.. ஏனெனில் இயர்போன்கள் நேரடியாக காதில் சென்று அதிக சேதத்தை ஏற்படுத்தும்.