செங்கம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு தலைமை மருத்துவமனைக்கு, தினமும் ஏராளமான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தினமும் 15 மருத்துவர்கள் பணிபுரியவேண்டிய இந்த மருத்துவமனையில், 2 மருத்துவர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
அதிநவீன படுக்கை வசதிகள் இருந்தும், காட்சிபொருளாகவே இருப்பதால் நோயாளிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர்.