உறவுக்காக  உயிரை விட்ட “வாத்து”

37
Advertisement

உண்மையான நண்பனுக்கு பல எடுத்துக்காட்டுகள் இருக்கிறது.ஏன் நம் வாழ்வில் கூட அது போன்ற பல தருணங்களை கடந்து தான் வந்துருப்போம்.இதுபோன்ற உண்மையான நண்பனுக்காக உயிரை விட்ட வாத்தின் வீடியோ இணையத்தில் உலாவருகிறது.

இந்த வீடியோ காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது.தற்போது அங்கு கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதற்கிடையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஓர் இடத்தில் தண்ணீரில் இரண்டு வாத்துகள்  அடித்துவருகிறது.

ஒருகட்டத்தில், இரண்டும் அங்குள்ள படிகள் இருக்கும் இடத்திற்கு வந்த நிலையில் ,ஒரு வாத்து மட்டும் வழிமாறி வெள்ளத்தில் அடித்துச்செல்கிறது.இதனை பார்த்த மற்றொரு வாத்து  ,படிக்கட்டில் ஏறி மீண்டும் அடித்துச்செல்லப்படும் வாத்தின் அருகில் குதித்துவிட்டது.தன் உறவுக்காக உயிரியே விட்டு பார்ப்பவர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது அந்த வாத்து.

Advertisement