மைக்கேல் ஜாக்சனைப்போல நடனமாடும் வாத்து

464
Advertisement

மைக்கேல் ஜாக்சனைப்போல நடனமாடும் வாத்தின்
வீடியோ அனைவரையும் கவர்ந்து வருகிறது.

மைக்கேல் ஜாக்சன் என்றதுமே அவரது நடன அசைவுகள்
நம் கண்முன்னே வந்து நிற்கும். அவரது நடனத்தைப்
போலவே அமைந்துள்ளது வாத்து ஒன்றின் செயல்.

பறவைகளுள் சிலவற்றுக்கும் நடனமாடும் குணமும்
திறனும் உண்டு என்பது நமக்குத் தெரிந்ததுதான்.
மயில் நடனமாடுவதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம்.

வாத்தும் பறவை இனங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
அவை நீர்நிலைகளில் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து
ரசித்திருக்கிறோம். என்றாலும், அவை நடனமாடுவது அரிதான
ஒன்று.

சமீபத்தில் ட்டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ள வீடியோக் காட்சி
ஒன்றில் உள்ள வாத்து ஒன்று பாதங்களை அசைத்து அசைத்து
நகர்ந்துசெல்வது நடனம் ஆடுவதுபோல அமைந்துள்ளது.
அதுவும் மறைந்த பாப் இசை நடனக்கலைஞரான மைக்கேல்
ஜாக்சனைப்போல அமைந்துள்ளதால், இணையத்தில்
அந்தக் காட்சிகள் வைரலாகப் பரவி வருகிறது.

ஒருவேளை மைக்கேல் ஜாக்சனின் நடன வீடியோவை இந்த
வாத்து பார்த்திருக்குமோ? அல்லது மைக்கேல் ஜாக்சனின்
ரசிகையாக இருக்குமோ?