Tuesday, June 24, 2025

துபே, பதிரனாவால் ‘கடும்கோபம்’ அடுத்த ஓவரில் நடந்த ‘Magic’

நடந்த தவறுகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பாடம் கற்றுக்கொண்டு, அதில் இருந்து மீண்டுவரும் வழிகளை செய்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் இருக்கும், குஜராத்தைத் தோற்கடித்த சம்பவத்தைக் கூறலாம்.

பேட்டிங், பவுலிங், பீல்டிங் அனைத்திலும் சிறந்த குஜராத்தை, அவர்களின் சொந்த மண்ணிலேயே தோற்கடித்து சென்னை சம்பவம் செய்துள்ளது. இந்தநிலையில் CSK வீரர்கள் சிவம் துபே, பதிரனாவால் களத்திலேயே தோனி கொந்தளித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

போட்டியின் 10வது ஓவரை வீசிய துபே, தோனி சொன்னது போல பந்துவீசாமல் சொதப்பினார். பீல்டிங்கில் இருந்த பதிரனாவும் தோனி சொன்ன இடத்தில் பீல்டிங் நிற்கவில்லை. இதனால் இருவரிடமும் தோனி சைகையில் கடிந்து கொண்டார்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட இருவரும், அவர் சொன்ன இடத்தில் சரியாக பீல்டிங் நின்றனர். 11வது ஓவரை வீசிய ஜடேஜா முதல் பந்தில் ஷாரூக்கான் விக்கெட்டையும், 4வது பந்தில் சாய் சுதர்சன் விக்கெட்டையும் எடுத்தார். ஷாரூக்கான்  கொடுத்த கேட்சை பதிரனாவும், சாய் சுதர்சன் கொடுத்த கேட்சை துபேவும் பிடித்தனர்.

ஜடேஜாவின் 11வது ஓவரே ஆட்டத்தின் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. ஒரே ஓவரில் 2 விக்கெட்களை இழந்த குஜராத்தால் கடைசிவரை, அந்த அடியில் இருந்து மீள முடியவில்லை. முடிவில் சென்னை அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியை சுவைத்தது. தோனி சொன்ன இடத்தில் நின்று பீல்டிங் செய்ததால், ஒரே ஓவரில் 2 விக்கெட்கள் சென்னைக்கு கிடைத்தன. இதைப்பார்த்த ரசிகர்கள், ” வயசெல்லாம் ஒரு விஷயமே இல்லை. தலைவன் என்னைக்குமே கெத்து தான், ” என்று தோனியைப் பாராட்டி வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news