Monday, January 13, 2025

மலைப்பிரதேசங்களுக்கு படையெடுக்கும் டெல்லி  மாணவர்கள்

தேர்வுகள் முடிவடைந்த நிலையில்,டெல்லி  பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் விடுமுறையை கழிக்க மலைப்பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் மற்ற சில பல்கலைக்கழகதின் தேர்வுகள் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில்,படிப்பை முடித்த இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் தேர்வை முடித்த ஜூனியர்  மாணவர்களும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில்,இறுதி ஆண்டு முடித்த மாணவர்கள் அதிக அளவில் மலை மற்றும் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து உள்ளனர்.இதன் காரணமாக டெல்லியில்,சுற்றுலா முன்பதிவு மையங்களில் அதிகளவு மாணவர்களால் முன்பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிப்பட்டுள்ளது.

இது குறித்து மாணவர்கள் கூறும் போது,இறுதி ஆண்டு தேர்வுகள் முடிந்து விட்டது.ஏற்கனவே சில மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள்.மற்றவர்களில் சிலர் மேல்படிப்பிற்கு வெளிநாடுகள் செல்கின்றனர்.

சிலர் தங்கள் சொந்த வேளைகளில் ஈடுபட உள்ளனர்.இதுவே நாங்கள் அனைவரும் கூடி இருக்கும் கடைசி தருணம் என்பதால்,கடைசியாக ஒருமுறை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க இது போன்று சுற்றுப்பயணம் போவதாக கூறுகின்றனர். 

Latest news