உத்தபிரதேச மாநிலம் பரேலியில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் மணமகளின் கழுத்தில் மாலை அணிவிப்பதற்கு பதிலாக அருகில் நின்று கொண்டிருந்த வேறொரு நபருக்கு மாலை போட்டுள்ளார். இதை பார்த்த பெண்ணின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து மணமகளின் தந்தை மணமகனின் குடும்பத்தினர் மீது புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில், அவர்கள் மீது வரதட்சனை துன்புறுத்தல் மற்றும் பொது அவமானம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.