குஜராத் மாநிலம், கடற்கரை பகுதியில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக இந்திய கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திய கடலோர காவல்படையினர், குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 300 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து குஜராத் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.