போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடிகர் கிருஷ்ணாவையும் விசாரிக்க போலீசார் சம்மன் அனுப்பினர்.
இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ஸ்ரீ காந்த் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.