பாகிஸ்தானில் இருந்து ஜம்மு காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவிய டிரோன்

385

ஜம்மு காஷ்மீரின் கான்ச்சக் தயாரன் பகுதியில் டிரோன் ஒன்று பறந்து வந்தது.

அந்த டிரோனை  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.

அந்த டிரோனில் குழந்தைகளுக்கான டிபன் பாக்சுக்குள் 3 வெடி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

அவைகளில் வெவ்வேறு நேரங்களில் டைமர் பொருத்தப்பட்டிருந்ததையும் போலீசார் கண்டறிந்தனர்.

இதனையடுத்து, அந்த வெடி பொருட்கள் செயலிழக்க வைக்கப்பட்டடதாக போலீசார் தெரிவித்தனர்.