இசை நிகழ்ச்சியின் போது பாடகரின் தலையில் மோதிய ட்ரோன் கேமரா! பரபரப்பு காட்சி

260
Advertisement

‘ஓமனப் பெண்ணே’, ‘டார்லிங் டம்பக்கு’ மற்றும் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ ஆகிய பாடல்களை பாடிய பென்னி தயால், வெள்ளிக் கிழமையன்று சென்னை VIT கல்லூரியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பாடிக் கொண்டிருந்தார்.

‘ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி’ என அவர் பாடிக் கொண்டிருக்கும்போதே அங்கு சுற்றிக் கொண்டிருந்த ட்ரோன் அவரின் தலையின் பின்புறம் தாக்கியது.

இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இந்நிகழ்வு தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பென்னி வெளியிட்ட வீடியோவில், தலையிலும் விரல்களிலும் காயம் ஏற்பட்டாலும் தான் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நிகழ்ச்சிகளில் முறையான பயிற்சி பெற்ற ட்ரோன் ஆப்பரேட்டர்கள் இருப்பதை உறுதி செய்வதோடு, மிக அருகில் ட்ரோன் பறப்பதை அனுமதிக்க கூடாது என சக கலைஞர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.