Monday, June 2, 2025

விடாமுயற்சி படத்தின் வசூலை முறியடித்ததா டிராகன்?

அஜித் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 6ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தது.

இதையடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி ‘டிராகன்’ திரைப்படம் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் நல்ல வசூலை குவித்து வருகிறது.

இப்படம் இதுவரை ரூ. 142 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வசூலை முறியடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news