உயிருக்கு உலைவைக்கும் ஊதுவர்த்தி!!அதிர்ச்சி தகவல்..

286
Advertisement

வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஊதுபத்தியிலிருந்து வெளியேறும் நச்சு வாசத்தால் ஏற்படும் கேடு சிகரெட் பிடிப்போருக்கு ஏற்படும் அபாயத்துக்கு இணையானது என்று புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசனையை வெளிபடுத்தும் ஊதுபத்தியின் புகையினால் அபாயகரமான கேடு விளையக்கூடும் என்று சீன பல்கலைக்கழக ஆய்வு ஒன்று கூறுகிறது.ஊதுபத்தியின் ரசாயன குணங்களால் டிஎன்ஏ(DNA) உள்ளிட்டவைகளின் மரபு ரீதியிலான மாற்றங்கள் நாட்பட்ட அளவில் ஏற்படுவது உறுதியாகி உள்ளது. இதனால் நிச்சயமான மரபணு மாற்றத்தால் ஏற்படும் அபாயம் அதிக அளவில் உள்ளதுஎன்றார்.

மொத்தம் 64 கலவை உட்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட ஊதுபத்திகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. சிகரெட்டால் உண்டாகும் மோசமான விளைவுகளுடன், சிகரெட் ஏற்படுத்தாத மரபணு மற்றும் செல்கள் பாதிப்பும் அதிகம் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருந்தது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆய்வு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ள மியூட்டாஜெனிக்ஸ், ஜெனோடாக்சின்ஸ் மற்றும் சைட்டோடாக்சின்ஸ் ஆகிய நச்சுப் பொருட்கள் புற்றுநோயை விளைவிக்க கூடியவை ஆகும் என்பதால் இதை அறவே தவிர்த்து விடுவது நல்லது.