Wednesday, February 5, 2025

AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம்: ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்

மத்திய நிதி அமைச்சகத்தின் பணியாளர்கள் அலுவலக கணினி, மொபைல்போன் உள்ளிட்ட சாதனங்களில் AI செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என ஊழியர்களுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

AI தொழில்நுட்பங்களால் அரசு ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு அபாயங்களை ஏற்படுத்தலாம் என்று விளக்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளில் தரவுப் பாதுகாப்பு கருதி டீப்சீக்(DeepSeek) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Latest news