மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது பலரும் அறிந்ததே. மீனில் புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி, பி காம்ப்ளக்ஸ், தாதுக்கள், கால்சியம், இரும்பு, அயோடின், துத்தநாகம் நிறைந்துள்ளன. இவை இதய ஆரோக்கியம், மூளை செயல்பாடு, கண் பார்வை மற்றும் எலும்புகளின் நலனுக்கு நல்லது.
ஆரோக்கியமான உணவுக்காக வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், சில உணவுகளுடன் சேர்த்து மீன் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் பலருக்குத் தெரியாது. இது தேவையற்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும். அப்படி சில உணவுகளுடன் மீன் சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.
மீன் சாப்பிட்ட உடனேயே பால், தயிர், நெய் அல்லது சீஸ் போன்ற பால் பொருட்கள் சாப்பிடவே கூடாது. இந்த கலவையானது தோலில் வெள்ளை புள்ளிகளை லுகோடெர்மா ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள்.
ஆயுர்வேதத்தின் படி, மீன் மற்றும் பால் பொருட்கள் ஒன்றுக்கொன்று முற்றிலும் எதிரானவை. அவற்றை ஒன்றாக சாப்பிடுவது செரிமான அமைப்பில் கடுமையான விளைவை ஏற்படுத்தும் மற்றும் ஒவ்வாமை மற்றும் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
மீன் வறுவலுக்கு எலுமிச்சை சாற்றை சேர்ப்பது மிகவும் பொதுவானது. ஆனால் இது முற்றிலும் தவறான செயல் என்று கூறப்படுகிறது. ஏனெனில் இவ்வாறூ மீனுடன் எலுமிச்சை சாறு சேர்ப்பது ஆர்சனிக் நச்சுத்தன்மையை உண்டாக்குமாம். அதுமட்டுமன்றி அது விஷமாகவும் மாறும் வாய்ப்பு உள்ளது என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக பழைய மீன் அல்லது சரியாக சேமிக்கப்படாத மீன்களில் இந்த ஆபத்து அதிகம் என்கின்றனர். எனவே, எலுமிச்சை சாறு பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது கூறுகின்றனர் மருத்துவர்கள். மேலும், கீரை, கொத்தமல்லி போன்ற பச்சை காய்கறிகளை மீனுடன் சேர்த்து சாப்பிட்டால், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து உடலில் சரியாக உறிஞ்சப்படாது. இதனால் வாயு, வயிறு உப்புசம் போன்ற செரிமான பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இந்த இரண்டையும் ஒன்றாக சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், இவற்றை சாப்பிட விரும்பினால், இரண்டிற்கும் இடையில் ஒரு இடைவெளி கொடுக்க வேண்டும்.
வறுத்த மீனை மற்ற வறுத்த அல்லது துரித உணவுகளுடன் கலந்து சாப்பிடுவது கொழுப்பு மற்றும் இதய நோய் அபாயத்தை வழிவகுக்கிறது. மேலும், இது செரிமானத்தை மெதுவாக்குகிறது மற்றும் வயிற்று பிரச்சினைகளை அதிகரிக்கிறது. ஆகையால், குறைந்த எண்ணெயில் சமைத்த மீனை மிதமாக சாப்பிடுவது எப்போதும் நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.
மீன் சாப்பிட்ட உடனே குளிர்பானங்கள் குடிப்பது நல்லதல்ல. குளிர்பானங்கள் செரிமானத்தை மெதுவாக்கும். குளிர்பானங்களில் உள்ள சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகள் மீன்களில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதைத் தடுக்கின்றன. இந்தக் கலவையானது வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். மீன் சாப்பிட்ட உடனே குளிர்பானங்களுக்குப் பதிலாக தண்ணீர் குடிப்பது மிகச்சிறந்தது.
மீன் சாப்பிடும்போதோ அல்லது சாப்பிட்ட பின்னரோ இனிப்பு சாப்பிடுவது நல்லதல்ல. அதிக சர்க்கரை உள்ள இனிப்புகளை சாப்பிடுவது, இரத்த சர்க்கரை அளவை அதிகரித்து நீரிழிவு மற்றும் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு சுலபமாக வழிவகுக்கும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகளுடன் போன்றவற்றை மீனுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவற்றில் நார்ச்சத்து அதிகம். இவை ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். மீனில் உள்ள புரதமும் ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். இந்த இரண்டையும் ஒன்றாகச் சாப்பிடுவதால் செரிமானம் மெதுவாகிறது. இது வயிற்று அசௌகரியம், அஜீரணம் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பலர் செய்யும் ஒரு பொதுவான தவறு. மது அருந்தும் போது மீன் சாப்பிடுவது ஆபத்தானதாகும். அவ்வாறு சாப்பிடுவதால் கல்லீரலில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. சில ஆய்வுகள் இது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாகவும் காட்டுகின்றன. அதனால் தான் மது அருந்தும்போது மீன் சாப்பிடக்கூடாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.)