கோடைக்காலத்தில் தயிரை சாப்பிடக்கூடாது! மருத்துவர்கள் கூறும் 3 காரணங்கள்..

186
Advertisement

பொதுவாக, கோடைகாலத்தில் பலரும் தினமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்போம். ஊட்டச்சத்துக்கள் மற்றும் ப்ரோபையாடிக்ஸ் நிறைந்துள்ள தயிரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு தேவையான புரதம், கால்சியம், விட்டமின் B கிடைக்கின்றன.

இப்படிப்பட்ட ஆரோக்கியம் பயக்கும் தயிரை வெயில் காலங்களில் ஏன் தினமும் சாப்பிடக் கூடாது என்பதை இப்பதிவில் பார்ப்போம். தயிர் சாப்பிட்டால் உடலுக்கு குளிர்ச்சி என பரவலான கருத்து நிலவுகிறது.

ஆனால், உண்மையில் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மைகள் தயிரில் உள்ளன. புளிப்பு சுவையும் உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மையும் உள்ள தயிர் செரிமானம் ஆக நிறைய நேரம் எடுக்கும் என ஆயுர்வேதம் கூறுகிறது. கபமும் பித்தமும் அதிகம் உள்ள தயிரில் வாதம் குறைவாக உள்ளது.

அதிகப்படியாக தயிர் சாப்பிடும்போது சிலருக்கு முகப்பருக்கள் உண்டாகும். அடுத்தபடியாக தயிரை எக்காரணம் கொண்டும் சூடேற்ற கூடாது. அப்படி செய்யும் போது தயிர் அதன் தன்மையை இழந்துவிடும்.

மேலும், பழங்களுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்தும் இயற்கை மருத்துவர்கள், தயிரை அளவாக சாப்பிடவும் தினசரி தயிரை மோராக்கி அதில்  உப்பு, மிளகு, சீரகம் சேர்த்து பருகுவது உடலுக்கு மிகவும் நல்லது என்றும் பரிந்துரைக்கின்றனர்.

தயிரோடு தண்ணீர் சேர்ப்பதால் அதன் வெப்ப நிலை சமன் செய்யப்பட்டு உடலுக்கு தேவையான குளிர்ச்சியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கும் என்பதே உணவியல் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.