வாலிபால் விளையாடும் நாய்

301
Advertisement

நாய் ஒன்று வாலிபால் விளையாடுவதுபோல
பலூனைத் தலையால் முட்டி விளையாடுவது
இணையத்தைக் கலக்கி வருகிறது-

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள
அந்த வீடியோவில் வணிக வளாக நுழைவாயில்
நாய் துள்ளித் துள்ளி பலூனை உயரே தட்டிவிடுவது
வேடிக்கையாக உள்ளது.

கடைத்தெருவில் அமைந்துள்ள அந்தக் கட்டட வாசலில்
சிலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க,
இந்த ஜீவனோ எதைப் பற்றியும் பயமில்லாமல் உற்சாகமாகப்
பலூனைத் தட்டித் தட்டி உயரே செலுத்துவதிலேயே கவனமாக உள்ளது-

பயிற்சியாளர் எவருமில்லாமல், போட்டியாளர் யாருமில்லாமல்,
நெட் எதுவுமில்லாமல் கோர்ட் எதுவுமில்லாமல் மிகுந்த ஆர்வத்துடன்
விளையாடுவதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது.

ஒருவேளை மனிதர்களோடு வாலிபால் விளையாடவிட்டால்
இந்த ஜீவன் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டாலும்
ஆச்சரியப்படுவதற்கில்லை.