நாய் ஒன்று  தனது வாலைக் கொண்டு கிட்டார்  வசிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

496
Advertisement

நாய்கள் மிகவும் அபிமான விலங்குகள், அவை மனிதர்களை தங்கள் அழகான செயல்களால் தொடர்ந்து மகிழ்விக்கின்றன. அவைகள்  மனிதர்களைச் சுற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றன. மேலும் அவை வாலை ஆட்டுவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு நாய் கிட்டார் வாசிப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?  இன்ஸ்டாகிராமில்  DOG  என்ற  பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோ ஒன்றில் , நாய் ஒன்று தன் வாலால்   கிட்டார் வசிக்கிறது.

வீடியோவில், நாய்க்கு பின்னால் ஒரு கருப்பு கிட்டார் வைக்கப்பட்டுள்ளது. நாய் ஆர்வத்துடன் வாலை ஆட்டும்போது, கிட்டார் சரங்கள் அசைந்து ஒலி எழுப்புகின்றன. நாய் அதன் வாலுடன் இசையை வாசிப்பது போல் காணப்பட்ட வீடியோ ரசிக்கும் படி உள்ளது.

https://www.instagram.com/reel/CbQKs87jXPj/?utm_source=ig_embed&utm_campaign=loading

நாய்களால் கிட்டார் வாசிக்க முடியாது!” என வீடியோவின் மேலே எழுதப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கூற்று தவறானது என்பதை வீடியோ நிரூபிக்கிறது.”எவரும் தங்கள் கனவுகளை அடைய முடியும் என்பதற்கான சான்று” என்று இந்த வீடியோவிற்கு தலைப்பிடப்பட்டுள்ளது.

நாயின் இந்த செயல் இணையவாசிகளை ரசிக்கவைத்துள்ளது. பலரும், தங்களுக்கு இந்த ஷோவ்வை பார்க்க டிக்கெட் கிடைக்குமா ? , எங்களுக்கு கச்சேரி  நடத்த கிட்டார் வாசிக்கும் இந்த நாய் வேண்டும் என வேடிக்கையாக  கமெண்ட் செய்து வருகிறார்கள்.