Wednesday, January 14, 2026

கொரோனா நோயாளிகளை கொல்ல சொன்ன மருத்துவர் – 4 ஆண்டுகளுக்கு பின் வெளியான ஷாக்

மகாராஷ்டிரா மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தவர் டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே. கடந்த 2021ம் ஆண்டு கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது இவர் பேசிய ஆடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆடியோவில் மருத்துவமனை படுக்கை நிரம்பி விட்டதால், சிகிச்சையில் இருக்கும் ஒரு கொரோனா நோயாளியை கொன்று விடுமாறு ஜூனியர் டாக்டரிடம் சசிகாந்த் தேஷ்பாண்டே கூறுகிறார். இந்த ஆடியோ பரவியதை அடுத்து சம்பந்தப்பட்ட கொரோனா நோயாளி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடுத்து போலீசார் டாக்டர் சசிகாந்த் தேஷ்பாண்டே மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரின் செல்போனையும் பறிமுதல் செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நோயாளியை காப்பாற்ற வேண்டிய மருத்துவரே கொல்ல சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News